வேலூர் மே 20
இலவச கண் மற்றும் காது பரிசோதனை முகாம் மாவட்ட பார்வை இழப்போர் தடுப்பு சங்கம் வேலூர் சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆராய்ச்சி மையம் மற்றும் தெய்வீக கல்வி அறக்கட்டளை குடியாத்தம் துளசி பார்மஸி இணைந்து இலவச கண் மற்றும் காது பரிசோதனை முகாம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் மாதா கோயிலில் பாதர் ஆக்டேவியா தலைமையில் நடைபெற்றது .
இந்த முகாமில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கலந்து கொண்டனர் முகாமில் கண் புரை பதிக்கப்பட்ட சுமார் 20 க்கு மேற்பட்டோரை அறுவை சிகிச்சைக்காக சென்னை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
மேற்படி இந்த முகாமின் ஏற்பாட்டினை முகாம் பொறுப்பாளர் செ.சதீஷ்குமார் செய்தனர் முகாமில் மருத்துவர்கள் செவிலியர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment