குடியாத்தம் மே.23
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
அடுத்த பெரும்பாடி கிராமதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர், இவர்களில் வெறும் இருபது நபர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் கொதிப்படைந்த கிராம மக்கள் மற்றும் நூறுநாள் வேலை பணியாளர்கள் சுமார் முன்னூறுக்கும் மேற்பட்டோர் பணிதளத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் வேலைகொடுக்க வேண்டும் என்றும், வேலை இல்லாதோருக்கு வேலையற்றோருக்கான அரசு நிர்ணயித்துள்ள படியினை வழங்க வேண்டும் என்றும், இருபது பேருக்கு மட்டுமே வேலை வேண்டி விண்ணப்பிக்க சொல்லி வாட்டர வளர்ச்சி அலுவலகம் பணிதள பொறுப்பாளர்களை கட்டாயப்படுத்துவது கூடாது, இருபதுபேருக்கு மட்டும் வேலை வழங்கினால் எப்படி ஒரு ஆண்டிற்குள் நூறு நாட்கள் பூர்த்தியாகும் என்றும். கிராமங்களுக்கு தேவையான பணிகளை கிராமசபைகள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் எப்படி தமிழ்நாடு முழுக்க ஒரேமாதிரியான வேலையை செய்யசொல்லி வேலைகளில் ஆட்குறைப்பை ஏற்படுத்துகிறார்கள் என்றும், அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திராவில் சென்ற ஆண்டு இந்த மே மாதத்தில் எவ்வளவு நபர்களுக்கு வேலை கொடுத்தார்களோ அதே அளவு நபர்களுக்கு இவ்வருடத்தின் இந்த மாதமும் வேலை தருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் வெறும் பத்து சதவித பயனாளிகளுக்கே வேலை கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற கோரிக்கைகளை பாதாகைகள் ஏந்தி கோஷமாக எழுப்பினர்.
இறுதியில் தர்ணாவில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் வந்து நேரில் பேசி கூடியவிரைவில் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்று பேச்சுவார்த்தை மேற்கொண்டு பணியை தொடர்ந்து செய்யுங்கள் என்று கேட்டுகொண்ட பிறகு தர்ணாவில் ஈடுபட்டு இருந்த நூறுநாள் வேலை பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment