வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் கோடைகால வெப்பத்தில் இருந்து பொதுமக்களின் தாகம் தீர்த்திட குடியாத்தம் நண்பர்கள் சேவை குழுவின் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நண்பர்கள் சேவை குழு மாநில பொதுச் செயலாளர் அமீன் தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கு, சிறப்பு அழைப்பாளர்களாக, நண்பர்கள் சேவை குழு நிறுவனத் தலைவர் காதர் பாஷா, சீவூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அஜிஸ் ஆகியோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ஜூஸ் மற்றும் நீர்மோர் ஆகியவற்றை வழங்கினர்.
விழாவில், மாநில பொருளாளர் காதர் பாஷா, மாநில முன்னாள் பொதுச் செயலாளர் அல்தாப், கௌரவ தலைவர் நூர் முஹம்மத், மாநிலத் துணைச் செயலாளர்கள் ரிஸ்வான், உஸ்மான், மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் ஜாவித் அலி, மாநில ஊடகப்பிரிவு செயலாளர் முஹம்மத் சுஹேல், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் கமாலுதீன், முபாரக் அலி, முஸ்டாக், ஆதிப், சத்தியராஜ், சர்தார் கான், இம்ரான் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.
அதேபோல, குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு குடியாத்தம் நண்பர்கள் சேவை குழு சார்பில் நிறுவனத் தலைவர் காதர் பாஷா அவர்களின் முயற்சியில் இரத்த வங்கி மருத்துவர் பியூலா ஆத்னர் அவர்களிடம் வழங்கினார். அப்போது, பொதுச்செயலாளர் அமீன், பொருளாளர் காதர் பாஷா, கெளரவ தலைவர் நூர் அஹ்மத் ஆகியோர் உடனிருந்தனர.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment