கல்லபாடி காப்ப காட்டில் செம்மரம் அறுப்பு ஒருவர் கைது செய்து விசாரணை - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 25 May 2024

கல்லபாடி காப்ப காட்டில் செம்மரம் அறுப்பு ஒருவர் கைது செய்து விசாரணை

குடியாத்தம் மே 25

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி  பீட்டிற்க்கு 
உட்பட்ட கல்லபாடி 
காப்பு காடு முதலியார் ஏரி பகுதியில் செம்மரம் அறுக்கப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் வன சரகர் வினோபா வனவர் குமரேசன் வனக்காப்பாளர் பூபதி மற்றும் வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டு பணி பணியாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில் வாணியங்குளம் பகுதியைச் சேர்ந்த
முனிராஜ் ( எ ) சேட்டு 
த/ பெ முருகேசன் (வயது45 ) என்பவர் செம்மரம் அறுத்துள்ளதாக தெரியவந்தது.

 மேலும் அவரை விசாரணை செய்து மாவட்ட வன அலுவலர் குருசாமி த பாலா அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவருடைய அறிவுறுத்தலின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதன் மதிப்பு சுமாா் 5 லட்சம் 750 கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad