குடியாத்தம் மே 25
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி கெங்கையம்மன் சிரசு திருவிழா இன்று காலை நடைபெற்றது.
தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு வைகாசி மாதம் 12 ம் தேதி கெங்கையம்மன் திருவிழா நடைபெறும் கெங்கையம்மன் சிரசு
கல்லபாடி அருள்மிகு காளியம்மன் ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க கெங்கையம்மன் சிரசு ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது.
இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற ஆடு கோழி உள்ளிட்டவற்றை பலியிட்டனர் மேலும் பூ காசுகள் எலுமிச்சம் பழம் மிளகு ஆகியவற்றை சிரசு தேர் மீது வீசி வீதியெங்கும் சூரை தேங்காய் உடைத்து செண்டை மேளம் முழங்க சிலம்பாட்டத்துடன் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டது.
கெங்கையம் சிரசு திருவிழாவை காண தமிழகம் அண்டை மாநிலமான ஆந்திரா மாநிலத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்
இதில் கோவில் அறங்காவலர் குழு தலைவரும் தர்மகா்தா சரவணன் அறங்காவலர்கள் குமுதா தயாளசங்கர் அன்பழகன் ஒன்றிய குழு உறுப்பினர் ஹேமலதா கருணாநிதி கிராம நிர்வாக அலுவலர் காந்தி ஊர் பிரமுகர் கிராம நிர்வாக அலுவலர் சசிகுமார் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment