குடியாத்தம் மே 24
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் பாலம் கைப்பிடி சுவர் நேற்று தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் இடிக்கப்பட்டது.
இந்தப் பாலம் பெருந்தலைவர் காமராஜர் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 1956 இல் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.அவர் தேர்தல் போட்டியிடும் போது வாக்குறுதியாக நான் வெற்றி பெற்றவுடன் பாலம் கட்டிக் கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்ததின் பேரில் ரூபாய் 2, 20,000 மதிப்பில் தரம் வாய்ந்த பாலத்தை கட்டினார் இதற்கு காமராஜர் பாலம் என்ற பெயர் சூட்டப்பட்டு லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள.
தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் சுமார் 37 கோடி மதிப்பில்
கவுண்டன்ய ஆற்று கரையோரம் இந்திரா நகர் முதல் பெரும்பாடி வரை சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. தங்கம் நகர் சந்தப்பேட்டை ஆம்பூர் பகுதிக்கு செல்லும் வகைகள் கவுண்டனய ஆற்றங்கரை ஓரம் காமராஜர் பாலம் அருகே ரவுண்டானா அமைக்க அளவீடு செய்யப்பட்டது.
இதனால் காமராஜர் பாலத்தின் கைப்பிடி சுவர்களை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது .நேற்று கைப்பிடி சுவர்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது இதனால் குடியாத்தம் பகுதியை காங்கிரஸ் சாா் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடடுத்து வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தேசிய நெடுஞ்சாலைத்துறை. பொதுப்பணி நீர்வள ஆதார துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அப்போது பாலத்திற்கு எந்த வித சேதாரம் இல்லாமல் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதனிடையே சாலை அமைக்கும் பணி முடியும் தருவாயில் காமராஜர் பாலம் அருகே உள்ள கைப்பிடி சுவர்களை அகற்றி காமராஜர் இருபுறத்தின் சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டது.இதனால் ஜேசிபி உதவியுடன் கைப்பிடி சுவர்களை அப்புறப்படுத்தும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதை தெரிந்து கொண்ட காங்கிரஸ் சார் அங்கு திரண்டனர் இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் நகர ஆய்வாளர் பார்த்தசாரதி ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர் பாலத்திற்கு எந்த வித சேதாரமில்லாமல் பணி நடைபெறும் என்று வாக்குறுதி அளித்தனர் இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கலைந்து சென்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment