வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேர்ணாம்பட்டு பகுதியில் டாக்டர்.அம்பேத்கர் இரவு பள்ளி மற்றும் பங்கரிஷிகுப்பம் தங்கை மரு.அனிதா இரவு பள்ளி இணைந்து நடத்திய 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் (11-05-2024) நிகழ்ச்சி
ஹோட்டல் விஷ்ணு பவன் 2வது தளம் ஏசி அறையில் சிறப்புடன் நடைபெற்றது.
விழாவிற்கு முன்னாள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாநில கபடி வீரர் பாஸ்கரன், முன்னாள் சமூக குழந்தைகள் நல அலுவலர் சிவ.கலைவாணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மாணவர்களுக்கான வழிகாட்டியாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் வெங்கடேசன் செல்வராஜ் , திண்டுக்கல் கைலாச எஜுகேஷனல் டிரஸ்ட் நிறுவனர் திருநாவுக்கரசு அவர்களும் நெல்லூர் பேட்டை மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியர். சி.சுதாகர் அவர்களும் அடுத்து படிக்க வேண்டிய பட்டப்படிப்புகள், படிப்பிற்கு உரிய அரசு உதவித்தொகைகள், சிறந்த கல்லூரிகள், எளிதில் அரசு வேலைக்கு செல்லும் பட்டய படிப்புகள் குறித்தும் பிரபலமான மருத்துவ படிப்புகள், துணை மருத்துவ படிப்புகள் குறித்தும் வழிகாட்டு உரையை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் விளையாட்டு துறையில் சாதிப்பது எப்படி என்ற தலைப்பில் தேசிய கபடி வீராங்கனை சென்னை கண்ணகி நகரை சார்ந்த தமிழக தங்கமகள் கார்த்திகா அவர்கள் தனது பயிற்சியாளுடன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளையாட்டில் சாதிப்பது குறித்து ஊக்க உரை நிகழ்த்தினார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பத்மநாபன் அவர்களும் ஆசிரியர்.ராஜ்குமார் அவர்களும் ஊக்க உரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வினை மரு.அனிதா இரவுப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர்.ச.திருமலை அவர்கள் தொகுத்து வழங்கினார்.
நிகழ்வில் மாணவ மாணவியருக்கு குறிப்பேடு எழுதுகோல் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment