வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோத காட்டன் சூதாட்டத்தைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று (30.05.2024) பாகாயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன அல்லாபுரம், பனந்தோப்பு பகுதியில் சேட்டு த/பெ தஸ்தகீர் என்பவர் காட்டன் சூதாட்டம் நடத்துவதாகவும் தன்னிடம் பணம் கட்டினால் ஒன்ருக்கு நூறு மடங்காக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ஆட்டோ ஓட்டுநனரான தன்னிடம் தினமும் பணம் பெற்றுக்கொண்டு மறுநாள் உனக்கு பரிசு விழவில்லை என்றும் தினமும் பணம் கட்டினால் தான் பரிசு விழும் என்று கூறி பணம் ஏமாற்றியதாக ராஜேஷ் த/பெ வெங்கடேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பானர் திருநாவுக்கரசு அவர்களின் உத்தரவின்பேரில் பாகாயம் வட்ட காவல் ஆய்வாளர் காண்டீபன் மற்றும் பாகாயம் காவல் உதவி ஆய்வாளர் தென்னரசி ஆகியோரின் தலைமையிலான போலீசார் எதிரி சேட்டு த/பெ தஸ்தகீர், சின்னஅல்லாபுரம், பனந்தோப்பு என்பவரை கைது செய்து எதிரியிடமிருந்து ரூபாய். 580/- பணம் மற்றும் துண்டு சீட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment