வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கும் கணவர் மீதும் புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீதும் நடவடிக்கை எடுக்க கோரி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 31 May 2024

வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கும் கணவர் மீதும் புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை மீதும் நடவடிக்கை எடுக்க கோரி

வேலூர் மாவட்டம் கணியம்பாடி பகுதியை சேர்ந்த ராதா காவல் நிலையத்தில் புகார் மனு  வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்டு மிரட்டும் தன் கணவர் மீதும் தன் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் ஒரு தலை பட்சமாக செயல்படும் வேலூர் அனைத்தும் அவர்களின் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் எஸ்.பி அலுவலகத்தில்  மனு.


வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் அடுத்த கணியம்பாடி பாரதி நகர் பகுதியில் சேர்ந்த ராதா என்ற பெண் மனு அளித்தார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது எனக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர் எனது கணவர் ரமேஷ் என்பவர் டைல்ஸ் ஓட்டும் வேலை செய்து வருகிறார் எனது கணவருக்கும், பெருமாள் கோயில் தெரு, வேலப்பாடி பகுதியில் வசிக்கும் சித்ரா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு திருமணம் செய்து வைத்த எனது மாமியார் மீனாட்சி என்பவரிடமும் எனது கணவர் ரமேஷ் மற்றும் சித்ரா ஆகியோரிடம் தட்டிக் கேட்ட போது மூன்று பேரும் சேர்ந்து என்னை அசிங்கமாக திட்டியும், அடித்தும், கொலை மிரட்டல் விடுத்ததோடு, எனது 2 பிள்ளைகளயும் பிடுங்கி வைத்துக் கொண்டு வெளியே துரத்தினார்கள்


இது சம்பந்தமாக நான் கடந்த 8.5.22024 அன்று தங்களிடம் மனு அளித்தேன். அதற்கான மனு எண்.405/SPG/2024 மனு ரசீது வழங்கப்பட்டது. இந்த மனு அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு அனுப்பப்பட்டது. மனு மீது கடந்த 17.5.2024 அன்று வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்க்கொண்டு எனது 2 பிள்ளைகளையும் எனது கணவர் ரமேஷ், சித்ரா, மீனாட்சி ஆகியோரிடம் இருந்து மீட்டு என்னிடம் ஒப்படைத்தனர்.


அன்றைய தேதியிலிருந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்களை அழைத்து எந்தவித விசாைைணயும் மேற்கொள்ளவில்லை. இது சம்மந்தமாக வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தும், அவர்கள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பினர். அந்த மனு மீதும் எந்தவித விசாரணை மேற்கொள்ளாமல் நிலுவையில் உள்ளது. 


வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரி இந்த மனு விசாரணை மேற்கொள்ளாத அளவிற்கு ஒரு தலைபட்சமாக மேற்சொன்ன நபர்களை காப்பாற்றும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார். எதிர் மனுதார்களுக்கு சாதகமாக செயல்படுகிறார். எனது கணவர் போன் மூலம் என்னை தொடர்பு கொண்டு நான் அளித்த புகாரை வாபஸ் வாங்குமாறு மிரட்டுகிறார். எனவே எனக்கு ஏதாவது என்றால் எனது கணவர் மற்றும் அவரது தாய் மீனாட்சி, எனது கணவரின் கள்ளக்காதலி சித்ரா தான் காரணம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


அவர்கள் நான் கொடுத்த புகார் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து தன்னை காப்பாற்ற வேண்டும் என அனுமதித்தார் மனுவினை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.


- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad