வேலூர், மே 21-
வேலூர் மாவட்டம், குடியாத்தம் எழில் நகரைச் சேர்ந்தவர் சத்யா (வயது 41) தலைவலி காரணமாக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மூளை சாவு அடைந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானம் செய்ய முன் வந்ததால் உடல் உறுப்புகளளான இதயம் மற்றும் நுரையீரல் சென்னை எம். ஜி. எம். மருத்துவமனைக்கும், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் வேலூர் அரியூர் நாராயணி மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் துரை ஜாஸ்பர் தெரிவித்துள்ளார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment