வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கோ. விசுவநாதன் அவர்களுக்கு
அமெரிக்காவில் உள்ள நியுயார்க் பல்கலைகழகத்தின் சார்பில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
வேலூர் விஐடி பல்கலைகழகத்தின் வேந்தர் கோ.விசுவநாதன் அவர்களுக்கு இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்ட கிளையின் சார்பில் வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், மருத்துவ குழு தலைவர் டாக்டர் வீ.தீனபந்து ஆகியோர் விஐடி பல்கலைகழகத்தில் வேந்தர் கோ.விசுவநான் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது அவை துணைத்தலைவர் முனைவர்.ஆர்.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி, பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment