வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அனங்காநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் நிர்மல் (வயது 22) தனியார் கல்லூரியில் ட்ரிபிள் இ (EEE ) படித்து வருகிறார். இவர் சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன் தனம் இரவு வயிற்று வலி அதிகமானதால் வலி தாங்க முடியாமல் துடித்த நிர்மல் வீட்டின் மேல் மாடியில் உள்ள அறையில் மேற்கூறையில் உள்ள ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குடியாத்தம் கிராமிய போலீசார் நிர்மல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment