குடியாத்தம் மே:21
வேலூர் மாட்டம், கீ.வ.குப்பம்
தாலுகா, சென்னங்குப்பம் கிராமத்தில் வசித்து வந்த சத்தியா (வயது 41) க/பெ. சசிகுமார், என்பவர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்து 20.05.2024 அன்று மாலை மூளை சாவு அடைந்து இயற்கை எய்தினார்.
அவரது மகன் மற்றும் குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில் உடலுறுப்புகளை தானமாக அளித்துள்ளனர். எனவே, தமிழக அரசு அறிவித்துள்ளபடி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி, சத்யா அம்மையாரின் உடலுக்கு மலர் மாலை வைத்து அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர்.
அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment