மினி லாரி இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 1 May 2024

மினி லாரி இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து.


வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அண்பூண்டி, விமான நிலையம் அருகே, எம்சாண்ட் ஏற்றி வந்த மினி லாரி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. அணைக்கட்டிலிருந்து வேலூர்  செல்லும் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் எம்சாண்ட் ஏற்றிவந்த மினிலாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தலுள்ள பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முதலுதவி கொடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி  வைத்துள்ளனர். காவல்துறையினர் முழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி  ஓட்டுனர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:

Post a Comment

Post Top Ad