வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியை சேர்ந்த குமார் (வயது 22) இவர் கட்டிட கூலி வேலை செய்து வந்தார் இதனிடையே இவர் வேலைக்கு செல்வதாக கடந்த 2 தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பாத நிலையில் 4 ம் தேதி காலை தட்டப்பாறை அரசு பள்ளி சுற்று சுவர் அருகே சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும் குமாரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ததும் தெரிய வந்தது இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலூகா போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு அவருடன் இருந்த நண்பர்களை விசாரித்து வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த குமாரின் நண்பன் மனோஜ் (வயது 24) என்பவர் கடந்த இரண்டு நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் போலீசார் மனோஜை தீவிரமாக தேடி வந்தனர் .
இன்று காலை காத்தாடிகுப்பம் பேருந்து நிலையம் அருகே மறைந்திருந்த மனோஜை கைது செய்து விசாரணை மேற்கொண்ட குடியாத்தம் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் குமாரை கொலை செய்ததை ஒத்துக் கொண்டான் மேலும் மனோஜ் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் வேலை செய்த போது ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு தனது சொந்த கிராமத்திற்கு வந்து இங்கேயே கட்டிட சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார்.
இதனிடையே தனது மனைவியின் மீது சந்தேகம் கொண்டு மனோஜ் குடிபோதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம் மேலும் இது குறித்து மனோஜ் நண்பர்கள் சிலர் மனோஜ் மனைவியைப் பற்றி அவதூறாக பேசி வந்துள்ளனர். இதனிடையே குமாரின் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு மனோஜ் மனைவி அடிக்கடி சென்று நீண்ட நேரம் கழித்து வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது .
இதனால் சந்தேகம் அடைந்த மனோஜ் கடந்த 2 ம் தேதி இரவு குடிபோதையில் இருந்த குமார் தட்டப்பாறை அரசு பள்ளி சமையல் கூடம் அருகே சென்று படுத்துத் தூங்கி உள்ளார் அப்பொழுது அங்கு சென்ற மனோஜ் குமாரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து அங்கிருந்து தப்பிவிட்டது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் தனது நண்பர்கள் தனது மனைவியைப் பற்றி அவதூறாக பேசிய பேசிய மன உளைச்சலாலும் குமாரின் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாக குமாரை கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளான். மேலும் மனோஜை கைது செய்த குடியாத்தம் தாலுகா போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சந்தேகத்தில் நண்பனின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment