குடியாத்தம் மே.25
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
நடுப்பேட்டை காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் புகழேந்தி மகள் சினகா (வயது 23). இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை செய்து வருகிறார்.
கடந்த 22 ஆம் தேதி இரவு 8 மணி அளவில் அவரது வீட்டில் இருந்து பக்கத்து தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தாராம்.
அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, ஒரே இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பின் தொடர்ந்து வந்து, சினேகாவின் செல் போனை பறித்தும், அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்க செயினை அறுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை குடியாத்தம் நகர போலிசார் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே பைக்கில் வந்த மூன்று பேரை நிறுத்தி அவர்களும் விசாரணை செய்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின்னாக பதில் கூறியதால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறை விசாரணையில் அவர்கள் கல்லூர் பகுதியைச் சேர்ந்த முகமது இம்ரான் (வயது 20) முபாரக் (வயது 20 )ஹரி (வயது 20) என்பதும், கடந்த 22 ஆம் தேதி நடுப்பேட்டை பகுதியில் செயின் அறுப்பு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதை அடுத்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஒன்றரை சவரன் தங்கச் செயின் செல்போன் டூவீலர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment