குடியாத்தம் ஜூன் 7
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ரோடு 19 எா்தாங்கல் கெங்கையம்மன் திருவிழா இன்று காலை வெகு விமர்சியாக நடைபெற்றது.06:06:2024 வியாழக்கிழமை மாலை தேர் திருவிழா ஊர்வலம் நடைபெற்றது.
7:6:2024 வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி அளவில் பம்பை வாத்தியமேளம் தாரை தப்பட்டை யுடன் ஶ்ரீ கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நடைபெற்றது.
இரவு 7-30 மணிக்கு மேல்பட்டி ரோடு A S P பட்டாசு கடையின்
போட்டா போட்டி வான வேடிக்கை மற்றும் இன்னிசைக் கச்சேரி நடைபெற உள்ளது 8-6 2024 அன்று மஞ்சள் நீராட்டு விழா 9 6 2024 பூ பல்லாக்கும் நடைபெற உள்ளது.
திருவிழாவை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ மிளகு உப்பு போன்றவை வீசி நேர்த்திக்கடனை செய்தார்கள்
இந்நிகழ்ச்சியில் ஊர் பெரியவர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment