குடியாத்தம் ஜூன் 15
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் இன்று காலை மருத்துவம் மற்றும் ஊர்நல பணிகள் கீழ் செயல்பட்டு வரும் மாநில மனநல பிரிவு மருத்துவர் மணி வேலன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவசர சிகிச்சை பிரிவு ரத்த வங்கி ஆய்வகம் அறுவை சிகிச்சை கூடம் சமையல் கூட கழிவறைகள் எக்ஸ்ரே பிரிவு ஆகியவற்றை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது நாள் ஒன்றுக்கு எத்தனை புற நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள் உள்நோயாளிகள் எண்ணிக்கை மருத்துவமனையில் பணியாளர்கள் எண்ணிக்கை இவர்களில் இவர்களின் பணி ஒதுக்கீடு பற்றி கேட்டறிந்தார்
மருத்துவமனையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார் இதனைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என டாக்டர்களுக்கு உத்தரவிட்டார் பின்னர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பல்வேறு கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அப்போது தலைமை மருத்துவ அலுவலர் மாறன் பாபு உடன் இருந்தனர்.
அதிகாரியின் அதிரடி உத்தரவின் பேரில் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குvடயாலிசிஸ் பிரிவுக்கு 40 inch L E D T V
I C ward பிரிவுக்கு பிரிட்ஜ்
அவசர பிரிவுக்கு ஒரு பிரிட்ஜ் ஒரு பீரோ உடனடியாக வந்தது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment