குடியாத்தம் ஜூன் 18
குடியாத்தம் திமுக நகர செயலாளர் சௌந்தரராஜன் தூண்டுதலின் பேரில், நகரத் துணைச் செயலாளா்
ர ஜம்புலிங்கம் மருத்துவ சமுதாயத்தஜாதி ரீதியாக இழிவாக பேசி சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதை கண்டித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி மற்றும் வேலூர் மாவட்ட சவரத் தொழிலாளர் சங்கம் சார்பில் குடியாத்தம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி மாநில தலைவர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சவரத் தொழிலாளர்கள் மாவட்ட தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.
30க்கும் மேற்பட்ட சவரத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டனம் கோஷங்களை எழுப்பினர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment