காட்பாடி - திருப்பதி இருப்பு பாதையில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 17 June 2024

காட்பாடி - திருப்பதி இருப்பு பாதையில் சீரமைப்பு பணிகள் தொடக்கம்!

வேலூர் ஜூன் 17

வேலூர் மாவட்டம் காட்பாடி இரும்பு  பாதையில் இருந்து  ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் காட்பாடி -திருப்பதி இருப்பு பாதையில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன.

காட்பாடி -திருப்பதி இருப்பு பாதையில் பல்வேறு பணிகள் நடைபெறாமல்  நிலுவையில் இருந்தன. இந்நிலையில் சில ரயில்களை நிறுத்திவிட்டு ரயில் பாதையை பழுது நீக்கும் இயந்திரங்களை கொண்டு வந்து மேலே செல்லும் மின் ஒயர்கள் சரி செய்யப்பட்டன. அத்துடன் தண்டவாளங்களைச் சுற்றி கொட்டப்பட்டு இருந்த ஜல்லிகள் அகற்றப்பட்டு புதிய ஜல்லிகள் கொட்டுவது மற்றும் ரயில்வே இருப்புப் பாதையை கடந்து செல்லும் வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல அந்தப் பகுதிகள் மீண்டும் மறு சீரமைப்பு செய்து புதுப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 இந்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்றதால் காட்பாடியில் இருந்து திருப்பதி மார்க்கமாகச் சென்ற சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad