முன்னாள் எம்.எல்.ஏ.ஜி.லதா கோட்டாட்சியர் இடம் மனு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 18 June 2024

முன்னாள் எம்.எல்.ஏ.ஜி.லதா கோட்டாட்சியர் இடம் மனு

குடியாத்தம்   ஜூன் 17
அடிப்படை வசதிகள் வேண்டி முன்னாள் எம்எல்ஏ ஏ ஜி லதா கோட்டாட்சியர் அவர்களிடம்  மனு அளித்தனர்.
01.காராஜர் பாலத்தின் அருகில் உள்ள மதுபான கடை இடம் மாற்றம் செய்தல்.
02.அரசு மருத்துவ மனை விரிவாக்கம் செய்தல் சம்மதமாக.
03.சந்தபேட்டையிலிருக்கும், பகத் சிங் சமுதாய கூடம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருதல் சம்மந்தமாக
04.குடியாத்தம் நகரில் குற்றப்பிரிவு காவல் நிலையம் அமைத்து கொடுத்தல்
 சம்மந்தமாக.
05.மேல் செட்டி குப்பம் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற கோருதல்.
06.மூங்கபட்டு நடுநிலைப் பள்ளியில் போதிய வகுப்பறை கட்டித்தர ஏற்படு செய்து தர கோரி.
07.பரதராமி காவல் நிலையம் மற்றும் மேல்பட்டி காவல் நிலையத்திற்கும் தனித்தனியாக 
காவல் ஆய்வாளர் நியமிக்க கோருதல் சம்மந்தமாக.
08.பள்ளிக்குப்பம் பகுதியில் சாலை வசதியும் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரியும் 

பேர்ணாம்பட்டு

01.தற்போது இருக்கும் பஸ் நிலையத்தை அதே இடத்தில் விரிவாக்கம் செய்தல்.
02.பத்தலபல்லி அணையை விரைந்து முடிக்க.
03.வீடற்றோருக்கு வீட்டு மனைகள் வழங்க
04.பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் சுடுகாட்டிற்கு சாலை வசதி ஏற்படுத்த.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியாத்தம் கோட்டாட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

மனுவை பெற்று கொண்ட கோட்டாட்சியர் ஒவ்வொரு மனுவையும் படித்து அதன் விவரங்களை குடியாத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளருமான ஜி.லதா அவர்களிடம் கேட்டறிந்தார். ஜமாபந்தி கூட்ட நிறைவுக்கு பிறகு நேரில் சென்று ஆய்வு செய்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் துரை செல்வம்,
மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எல்.மணி,
குடியாத்தம் ஒன்றிய செயலாளர்கள் டி.ஆனந்தன், கே.சி.பிரேம்குமார், துணை செயலாளர் ஜி.தங்கவேலு,
கே.வி.குப்பம் ஒன்றிய துணை செயலாளர்கள் 
இரா.பிச்சமுத்து, கே.கே.சி.திருநாவுக்கரசு, மாதனூர் ஒன்றிய செயலாளர் குமார்.,
மற்றும் நிர்வாகிகள் 
முனுசாமி, தன்ராஜ், சகாதேவன், ஆகியோர் உடன் இருந்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad