கணவருடன் திருவிழாவை காண வந்த பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 27 June 2024

கணவருடன் திருவிழாவை காண வந்த பெண் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், ஜிட்டபல்லி மதுரா, கொட்டார மடுகு கிராமத்தில் கெங்கையம்மன் திருவிழாவினை காண வந்த துர்கா (வயது 22 )கணவர் பெயர் சின்னராசு என்பவர் இன்று மாலை  3.50 மணி அளவில் தனது சொந்த ஊரான ஆம்பூருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பும் போது, மேற்படி கிராமத்திலேயே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

 மேற்படி நபரின் பிரேதமானது குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது மேற்படி நபருக்கு மூன்று வயது சுகந்தி என்னும் பெண் குழந்தையும் , 10 மாத திருமலைவாசன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது இது சம்பந்தமாக குடியாத்தம் கிராமிய காவல் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad