நியூ லைப் ஹவுஸ் சார்பில் மது போதை விழிப்புணர்வு ஊர்வலம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 27 June 2024

நியூ லைப் ஹவுஸ் சார்பில் மது போதை விழிப்புணர்வு ஊர்வலம்

குடியாத்தம் ஜூன் 27

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நியூ லைப் ஹவுஸ் சார்பில் மது போதை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 

மது போதை டிரஸ்தமற்றும் மனநிலை சிகிச்சை மறுவாழ்வு மையம் சார்பில், சேர்த்து வண்டை வித்யாலட்சுமி மேல்நிலைப்பள்ளி திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி காவல் மாணவர் படை இணைந்து உலக போதை ஒழிப்பு நாள் விழிப்புணர்வு ஊர்வலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது. 
நகராட்சி சேர்மன் சௌந்தர்ராஜன் தலைமை வகித்து ஊர்வலத்தை கொடியசைசித்து தொடங்கி வைத்தார். பாரி வரவேற்றார். 
வழக்கறிஞர் பூபதி அதிமுக நகர செயலாளர் ஜே கே என் பழனி சரஸ்வதி வித்யாலயா பள்ளி சேர்மன் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மது போதை மற்றும் மனநல மையயங்கள் நல சங்க மாநில நிர்வாகிகள் தேவராஜ் சக்திகுமார் அரவிந்த்ரஜ் சுரேஷ் சதீஷ் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

ஊர்வலம் புது பஸ் ஸ்டாண்ட் இருந்து தொடங்கி ஜி எச் சாலை வழியாக காங்கிரஸ் ஹவுஸ் ரோடு , நானும் உன்னை சந்திப்பு சாலை வழியாக மீண்டும் புது பஸ் ஸ்டாண்ட் வந்து அடைந்தனர். டிரஸ்ட் சிவ சண்முகம் நன்றி கூறினார்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad