குடியாத்தம் ஜூன் 21
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.
நடைபெற்று வரும் ஜமாபந்தியில் மாற்றுத்திறனாளிகள் மனு அளித்த போது அவர்களுக்கான தேசிய அடையாள அட்டையை பெற வேலூர் அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை இருப்பதாக தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஜூன் 20 உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடத்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இம்முகாமில் கண் மருத்துவர், காது ,மூக்கு, தொண்டை மருத்துவர், மன நல மருத்துவர், முடநீக்கு மருத்துவர் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும் இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மேற்கொள்ளப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றுவந்தவர்களுக்கு தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் புறநோயளிகள் பிரிவு, உள்நோயளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு ஆகிய பிரிவுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் சிகிச்சைக்கு வந்த பொதுமக்களிடம் சிகிச்சை அளிப்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் மருத்துவ அலுவலர்களிடம் மருந்துகள் இருப்பு குறித்து கேட்டறிந்து, அலுவலக பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துமனையில் தலைமை மருத்துவமனை கட்டடம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை ஒப்பந்ததாரரிடம் கூறி விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த தலைமை மருத்துவமனை கட்டடம் ரூ.40 கோடி மதிப்பில் 9210.37 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 5 தளங்களுடன் அமைக்கப்பட்டு வருகிறது. தரைத்தளம் 1480 சதுர மீட்டர் பரப்பளவில் மருந்தகம், நோய் கண்டறியும் பிரிவு, வெளியோளிகள் அவசர சிகிச்சை பிரிவு, நோயாளிகள் மருத்துவ சோதனை பிரிவு வசதிகளுடன் அமைக்கபட்டு வருகிறது.
முதல் தளம் 1430 சதுர மீட்டர் பரப்பளவில் மகப்பேறு மருத்துவ அறுவை சிகிச்சை அரங்கு, பிரசவ பிரிவு, பிரசவத்திற்கு பின் சிகிச்சை வார்டு, மின்சார அறை போன்ற வசதிகளுடனும், இரண்டாம் தளம் 1555.18 சதுர மீட்டர் பரப்பளவில் பெண்கள் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, மின்சார அறை போன்ற வசதிகளுடனும் அமைக்கபட்டு வருகிறது.
மூன்றாம் தளம் 1555.18 சதுர மீட்டர் பரப்பளவில் ஆண்கள் சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பின் வார்டு, மின்சார அறை போன்ற வசதிகளுடனும் , நான்காம் தளம் 1555.18 சதுர மீட்டர் பரப்பளவில் தீவிர சிகிச்சை பிரிவு, சிறப்பு சிகிச்சை பிரிவு, சிறுநீர் பிரித்தல் பிரிவு, மின்சார அறை போன்ற வசதிகளுடனும் அமைக்கபட்டு வருகிறது.
ஐந்தாம் தளம் 1555.18 சதுர மீட்டர் பரப்பளவில் கண் அறுவை சிகிச்சை அரங்கு, பொது அறுவை சிகிச்சை அரங்கு, எழும்பு சம்மந்தப்பட்ட அறுவை சிகிச்சை அரங்கு, அவசர அறுவை சிகிச்சை அரங்கு, அறுவை சிகிச்சைக்கு பின் வார்டு, மின்சார அறை போன்ற வசதிகளுடனும் மற்றும் 78.25 சதுர மீட்டர் பரப்பளவில் மின்தூக்கி மற்றும் படிகட்டு அறை போன்ற வசதிகளுடனும் அமைக்கபட்டு வருகிறது.
இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு. பாலசந்தர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், குடியாத்தம் நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன், குடியாத்தம் வட்டாட்சியர் சித்ரா தேவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment