குடியாத்தம் ஜூன் 20
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை புதுப்பிக்க மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர சமபந்தி கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
தமிழ் நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளரும் மூங்கபட்டு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியருமான சேகர் அவர்கள்
மூங்கப்பட்டு நடுநிலைப் பள்ளியில் 62 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் ஓட்டுக் கட்டடங்களை இடித்து அதே இடத்தில் புதிய வகுப்பறை கட்டடத்தை கட்ட வேண்டும் என்று கோரி
இரண்டாவது நாளாக நடைபெற்று கொண்டிருக்கும் ஜமாபந்தி கூட்டத்தில் ஜமாபந்தி அலுவலரும் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியுமான சுமதி அவர்களிடம் வட்டார கல்வி அலுவலர் உஷா ராணி அவர்கள் முன்னிலையில் மனு கொடுத்தார்.
மனுவை பெற்று கொண்ட ஜமாபந்தி அலுவலர் கல்விக்கான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இதை தொடர்ந்து பதிலளித்து பேசிய வட்டார கல்வி அலுவலர் உஷா ராணி அவர்கள் நானும் துறை ரீதியான அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து வகுப்பறை கட்டிடங்கள் கட்டிக்கொடுக்க ஏற்பாடுகள் செய்வதாக கூறினார் .இந்நிகழ்வில் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் சுரேஷ் குமார்,சமுக ஆர்வலரும் அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினருமான துரை செல்வம் உடன் இருந்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment