குடியாத்தம் ஜூன் 21
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
ஒன்றியத்தில் செயல்பட்டுவரும் அரசு துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றிவரும் கழிவறை பணியாளர்(Scavengers)களுக்கு கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் துப்புரவாளர்(Sweeper)களுக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை.
எனவே, பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் தூய்மைப் பணியாளர்களை சரியான முறையில் வேலை வாங்க முடியாமல் தூய்மைப் பணிகள் தொய்வான நிலையில் நடைபெறுகின்றன. எனவே, தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை கருதியும், பள்ளியில் தூய்மைப் பணிகள் தொய்வின்றி நடைபெறுவதை உறுதி செய்யவும் – கழிவறை பணியாளர்களுக்கு வருடக்கணக்கில் வழங்கப்படாமல் இருக்கும் சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட கோரிக்கை மனுவை பெற்று கொண்ட வருவாய் தீர்வாய அலுவலரும் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரியும் துணை ஆட்சியருமான ப.சுமதி அவர்கள் மிக முக்கியமான கோரிக்கை மாவட்ட ஆட்சியர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறினார்
இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் வேலூர் மாவட்ட துணை செயலாளர் துரை செல்வம் உடன் விவசாய சங்க வேலூர் மாவட்ட செயலாளர் எஸ் மகேஷ்பாபு உடன் இருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment