சுடு தண்ணீர் காய வைக்கும் போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 22 June 2024

சுடு தண்ணீர் காய வைக்கும் போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

குடியாத்தம், ஜூன் 21 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தண்ணீர் காய வைக்கும்போது
மின்சாரம் தாக்கியதில் மாணவி உயிரிழந்தார்.
குடியாத்தத்தை அடுத்த பரதராமி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கோபி.
இவரது மகள் சஞ்சனா(வயது 14). அங்குள்ள அரசுப் பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் ஹீட்டரில் தண்ணீர் காய வைத்தபோது,
சுவிட்சை அணைக்காமல் தண்ணீரில் கை வைத்தாராம். அப்போது மின்சாரம்
தாக்கியதில் மயக்கமடைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து பரதராமி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad