தமிழக பள்ளிக்கல்வி மான்ய கோரிக்கை ஆசிரியர் இயக்கங்களின் வரவேற்பும் வேண்டுகோளும் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 25 June 2024

தமிழக பள்ளிக்கல்வி மான்ய கோரிக்கை ஆசிரியர் இயக்கங்களின் வரவேற்பும் வேண்டுகோளும்

வேலூர் ஜூன் 25

வேலூர் மாவட்டம் தமிழக பள்ளி கல்வி மானிய கோரிக்கை ஆசிரியர் இயக்கங்களின் வரவேற்கும் வேண்டுகோள் வேலூர் மாவட்ட  ஆசிரியர் இயக்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் இன்று வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமிழ்நாடு உருது வழி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் முகமது ஷாநவாஸ் தலைமை தாங்கினார்.  தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் பள்ளிக்கல்வி மான்ய கோரிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் குறித்து பேசினார்.

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாவட்ட பொருளாளர் எம்.சினேகலதா, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் ஜி.கோபி, தமிழக தமிழாசிரியர் கழக மாநில துணைத்தலைவர் வாரா, ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.  பின்னர் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்ட பள்ளிக்கல்வி மான்ய கோரிக்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும கால நிலை சுற்று சூழல், ஆளுமைத்திறன், 6 முதல் 9ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் கல்வி, எந்திரனியல் ஆய்வகம், உடல் மன சமூக இடர்பாடுகளை நீக்கும் அகல்விளக்கு திட்டம், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் உள்ளிட்ட 25 அறிவிப்புகளை ஆசிரியர் அமைப்புகள் சார்பில் மனதார வரவேற்கின்றோம்.
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசுப்பள்ளிகளுக்கு இணையாக வசதிகள் செய்து தரப்படவேண்டுமென கோரிக்கை வைத்தோம் எங்களுடைய கோரிக்கையினை ஏற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் 42 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பினை வரவேற்கின்றோம்.
11 மற்றும் 12-ம் வகுப்புக்கான தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன என தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளிக்கல்வி மான்ய கோரிக்கையில்  தெரிவித்துள்ளார்.      மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,   மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, க்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
  பல்வேறு கல்விக்குழுக்களின் பரிந்துரையின் படி   உயர்நிலை மேல்நிலைப்பள்ளின்   பள்ளி வேலை நாட்கள் 200 நாட்கள் என நடைமுறையில் இருந்தது.   இதனை 203, 207, 210 நாட்கள் என ஆண்டு தோறும் உயர்த்தி தற்போது நடப்பு கல்வியாண்டில் 220 நாட்கள் என அறிவித்துள்ளது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் அரசு ஊழியர்கள் அனைவரும் சனிக்கிழமை விடுமுறை நாட்களாக உள்ள நிலையில் ஆசிரியர்கள் மட்டும் வாரத்தில் இரண்டு சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு பள்ளி வேலை நாட்களை முன்பு நடைமுறையில் இருந்தது போல் 200 நாட்களாக மாற்றி அறிவிக்க வேண்டுகின்றோம்.
தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் காலியேற்பட்டால் அவை நிரப்ப படாமல் அப்பளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதால் மெல்ல கற்கும் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பினை மறுக்கும் சூழல் ஏற்படுகின்றது. ஒரு முறைக்கு மேல் தோல்வி அடைந்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொதுப்பாட பிரிவுகளிலே அறிவியல் பிரிவிலோ அல்லது கலை பிரிவிலோ சேர்க்கப்படுவதில்லை இதனால் இந்த மாணவர்கள் உயர் கல்வி பெற இயலாத சூழல் ஏற்படுகின்றது மேலும் பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர வேண்டும் என்று சொன்னால் அவர்கள் வெகு தொலைவுக்கு சென்று கல்வி பெறவேண்டிய தேவை ஏற்படுகிறது எனவே மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு தொழிற்கல்விப் பாடத்தையாவது கட்டாய பாடமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
அனைத்து உயர்நிலை மற்றம் மேல்நிலை பள்ளிகளிலும் அலுவலக உதவியாளர்கள், தூய்மை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் காலமுறை ஊதிய ஏற்ற முறையில் பணியமர்த்தப்பட வேண்டும்.
முடிவியல் ஜாக்டோ செய்தித்தொடர்பாளர் வாரா நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad