பேரணாம்பட்டு ஜூன் 24
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு எருக்கம்பட்டு ஊராட்சியில் அரசு இடத்தில் மரங்களை வெட்டி கடத்தி வந்த ஊராட்சி மன்றத் தலைவர். ராணியின் கணவர். வெங்கடேசன். துணைப்போகும் வட்டார வளர்ச்சி அலுவலர். வின்சென்ட் ரமேஷ்பாபு. பேரணாம்பட்டு. ஜூன்.23. பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் எருக்கம்பட்டு ஊராட்சியின், ஊராட்சி மன்றத் தலைவர். ராணியின் கணவரான, வெங்கடேசன். கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள சர்வே எண் 102/2இல் பாதை புறம்போக்கிலிருந்த 2 தேக்கு மரங்களை வெட்டி அதிக விலைக்கு விற்றது தொடர்பான வழக்கில் வெங்கடேசன் மீது பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் வருவாய் துறையினார் புகார் தெரிவித்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஊராட்சி மன்றத் தலைவர். ராணியின் கணவர். வெங்கடேசன் மீண்டும் தொடர்ந்து அரசுப்பாதை புறம்போக்கிலிருந்த 10-க்கும் மேற்ப்பட்ட மரங்களை வெட்டி, செங்கல் சூளைக்கு விற்பனைச் செய்துள்ளார்.
தொடர்ந்து அரசுக்கு சொந்தமான நிலங்களை வெட்டி விற்பனை செய்து வரும் ஊராட்சி மன்றத் தலைவர். ராணியின் கணவர். வெங்கடேசன் மீதும், இந்த சம்பவம் மட்டுமல்லாமல் ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தனது மனைவி, ராணிக்கு பதிலாக தான் மூக்கை நுழைத்து பல்வேறு முறைகேடுகளை செய்து, தனது மனைவி ஊராட்சி மன்றத் தலைவர். ராணியின் பதவியை அதிகார துஸ்புரியோகம் செய்து வரும் வெங்கடேசன் மீதும், இதற்கு இடமளித்து தனது அதிகாரத்தை துஸ்புரியோகம் செய்யும் ஊராட்சி மன்றத் தலைவர். ராணியின் மீதும், இதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் மேற்கண்ட இருவருக்கும் துணைப்போகும் வட்டார வளர்ச்சி அலுவலர். வின்சென்ட் ரமேஷ்பாபு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment