தொடர் மழை காரணமாக பொன்னை ஆற்றில் நீர்வரத்து தொடக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 25 June 2024

தொடர் மழை காரணமாக பொன்னை ஆற்றில் நீர்வரத்து தொடக்கம் விவசாயிகள் மகிழ்ச்சி

காட்பாடி ஜூன் 25

வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா பொன்னை வள்ளிமலை சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. 

இதனால் வள்ளிமலை சுற்றுப்புற பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிந்த சூழல் நிலவி வருகிறது. இதே போல் தமிழ்நாடு ஆந்திர எல்லை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக வறண்டு கிடந்த பொன்னையாற்றில் நேற்று முன்தினம் இரவு முதல் நீர்வரத்து தொடங்கியுள்ளது. இந்த நிலையில் பொன்னயாற்றின் அணைக்கட்டு பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் அப்பகுதி கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண் 

No comments:

Post a Comment

Post Top Ad