தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் கிளையின் மாவட்ட கிளையும் இணைந்து குழந்தைகள் அறிவியல் விழா என்னும் இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கம் இன்று துவக்கி வைக்கப்பட்டது எழுத்தாற்றல், வாசிப்பு, நலவாழ்வு, நல்லுணவு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி கருத்தரங்கம் இன்று 01.06.2024 காலை 10.00 மணியளவில் வேலூர் ஊரிசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பயிற்சி கருத்தரங்கதிற்கு வேலூர் கிளை தலைவர் பேராசிரியர் க.தேவி தலைமை தாங்கினார் செயலாளர் முத்துசிலுப்பன் வரவேற்றுப் பேசினார்
மாவட்ட தலைவர் பேராசிரியர் பே.அமுதா விழா அறிமுக உரை ஆற்றினார் கருத்தாளர்கள் அறிமுகப்படுத்தி பா. ராஜேந்திரன் பேசினார் மாநில துணைத்தலைவர் முனைவர் என் மாதவன் விழா துவக்கு உரையாற்றினார் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை கல்வி தனலட்சுமி அவர்களும் மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கக்கல்வி சு தயாளன் அவர்களும் சிறப்புரையாற்றினர் ஊரிசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜே எபினேசர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் செ.நா. ஜனார்த்தனன் மாநில துணைத்தலைவர் எஸ்டி பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்
பயிற்சி கருத்தாளர்கள் சேதுராமன், கு.செந்தமிழ்ச்செல்வன் கே.விஸ்வநாதன், நீதிமணி, ஜெ.ஜான்பாபு, பி.சண்முகம் மருத்துவர் தில்லைவாணன் பூ.சாமி ஆ.ஜோசப்அன்னையா, எஸ்.சுரேந்திரன், வி.குமரன், என்.கோட்டீஸ்வரி, ஆர்.காயத்ரி, பெ.ராமு, ரவீந்திரன், ராதாகிருஷ்ணன், பொன்.வள்ளுவன், இளவழகன், வாரா உள்ளிட்ட குழுவினர் இரண்டு நாட்கள் பயிற்சியினை வழங்குகின்றனர்
இந்த இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கில் மாணவர்களுக்கு எழுத்தாற்றல், வாசிப்பு, நலவாழ்வு, நல்லுணவு அறிவியல் செயல்பாடுகள் பயிற்சிகள் பயிலரங்குகள் குழு விளையாட்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது
மேலும் கணக்கும் இனிக்கும் அறிவியல் சோதனைகள் இயற்கையோடு இணைந்து வாழ்வோம் ஒரிகாமி ஓவியம் கலையும் கைத்திறனும் கதையாடல் அறிவியல் அற்புதங்கள் வளர் இளம் குழந்தைகளின் உடல் நலமும் மன நலமும் வாசிப்போம் நேசிப்போம் பேசிப்போம் அறிவியல் பாடல்கள் ஆகிய தலைப்புகளில் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது பயிற்சி நிறைவாக அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது
முடிவில் கிளை பொருளாளர் பா.சேகர் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment