குடியாத்தம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்ப்பு சேவை திட்டங்கள் வெள்ளி விழா ஆண்டு முப்பெறும் விழா நடைபெற்றது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 30 June 2024

குடியாத்தம் லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்ப்பு சேவை திட்டங்கள் வெள்ளி விழா ஆண்டு முப்பெறும் விழா நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் (28.6.2024) அன்று மாலை லயன்ஸ்சங்க கட்டிடத்தில் புதிய நிர்வாகிகள் பதவியேற்ப்பு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் சங்கத்தின் வெள்ளி விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு குடியாத்தம் நகர லயன்ஸ் சங்க தலைவர் டி.கமலஹாசன் தலைமை தாங்கினார், 2023-24ஆண்டு செயலாளர் முருகதாஸ் செயலாளர் அறிக்கை வாசித்தார், 2024-25 பொருளாளர் எஸ்வி சுரேஷ்குமார் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  324H லயன்ஸ் மாவட்ட முதலாம் துணை ஆளுநர் என்.டி. பாஸ்கரன் புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி சிறப்புரையாற்றினார்.


முன்னாள் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் (ஒய்வு) டாக்டர் டி.ஜெயக்குமார் அவர்கள் புதிய உறுப்பினர்கள் ஏ.ஆறுமுகம், பார்த், தி.பிரவீன்குமார் ஆகியோர் சங்கத்தில் இணைத்து நலத்திட்ட உதவிகள் நகராட்சி பணியாளர்களுக்கு அரிசி மற்றும் லுங்கிகள், அண்ணதான சேவைக்கு 2 மூட்டை அரிசி வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் மாவட்ட லயன்ஸ் சங்க நிர்வாகிகள் டாக்டர் என்.வெங்டேஸ்வரன், சி.புருஷோத்தமன், சி.ராஜி, ஏகே. ரவி, சிவராஜ், டி.ரங்கராஜன், அரக்கோணம் ரவி சங்கரன், ஏ.சுரேஷ்குமார், ஏ.காசி, விஸ்வநாதன், கிரிதர்பிரசாத், குடியாத்தம் லயன் சங்க நிர்வாகிகள் ஜேஜி நாயுடு, கார்த்திகேயன், பிரம்மாஸ் செந்தில், கிரிதர் பிரசாத், கோல்டன் பாபு, என்எஸ்.விவேகானந்தன், குமார், ஆசிரியர் இன்பநாதன், அருள்பிரகாசம், பொன்மனம் திருநாவுக்கரசு மற்றும் ரோட்டரி நிர்வாகிகள் ரங்கா, வாசுதேவன், சி. கண்ணன், சி கே வெங்கடேசன், சுகுமாரன் டி என் ஆர் இளங்கோவன் முன்னாள் நகர. மன்ற தலைவர் த.புவியரசி, முன்னாள் நகர மன்ற துனைத்தலைவர் மோகன்ராஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் விஇ.கருனா, வழக்கறிஞர்கள் ஆர்.கோவிந்தசாமி, எஸ்.ஸ்ரீசந்தோஷ்குமார், பொதுப்பனித்துறை ஒப்பந்ததாரர்கள் ஆர்.தயாளன், அம்மன் இ.ரகுராமன், சிவக்குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இறுதியில் ₹25 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் மற்றும் மரக்கன்றுகள் நெல்லூர் பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நினைவு பரிசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் பேனா பென்சில் ரப்பர் கல்வி உபகரனங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது, இறுதியில் (2024.25) ஆம் ஆண்டு செயலாளர் என்.நமச்சிவாயன் நன்றி கூறிஷினார்.

No comments:

Post a Comment

Post Top Ad