குடியாத்தம் ஜூன் 8
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் விதவைகள் என்று மாதந்தோறும் சுமார் 150 நபர்களுக்கு நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டது.
இன்று நடுப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏழைகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கேவி ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்டி மோகன்ராஜ் அவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் ஏழைகளுக்கு
அரிசி பருப்பு சேமியா மஞ்சள் தூள் போன்ற நிவாரண பொருட்களை 100 நபர்களுக்கு 80-வது மாதமாக வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது.
உடன் வீட்டு வசதி கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவரும் முனனாள் நகர மன்ற உறுப்பினருமான வி இ கருணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் நெல்லூர் பேட்டை அரசு பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர் முருகன் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment