வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கே .வி. குப்பம் தாலுகா, லத்தேரி குக்கலப்பள்ளி கிராமத்தில் பனமடங்கி பள்ளத்தூர் ரோட்டில் மலை மேல் அமர்ந்துள்ள ஸ்ரீ காலபைரவர் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலையில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
இதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து பிற்பகல் 1.30 மணியளவில் சிறப்பு யாகம் மற்றும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது.
பக்தர்கள் சுமார் 3,000க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து ஸ்ரீ காலபைரவரை தரிசனம் செய்தனர். தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஸ்ரீ காலபைரவர் கோயில் நிர்வாகி காட்பாடி ஸ்ரீ சாரதி வெகு சிறப்பாக செய்திருந்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
No comments:
Post a Comment