பட்ஜெட் அறிவிப்பு – நடுத்தர மக்கள் ஊதியம் பெறுவோர் சேமிக்கும் பழக்கத்திற்கு எதிராக ஆசிரியர் அரசு ஊதியம் பெறுவோர் ஏமாற்றம் தனிநபர் வருமான வரி வரம்பு 10இலட்சமாக உயர்த்த இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 24 July 2024

பட்ஜெட் அறிவிப்பு – நடுத்தர மக்கள் ஊதியம் பெறுவோர் சேமிக்கும் பழக்கத்திற்கு எதிராக ஆசிரியர் அரசு ஊதியம் பெறுவோர் ஏமாற்றம் தனிநபர் வருமான வரி வரம்பு 10இலட்சமாக உயர்த்த இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை

வேலூர் ஜுலை 23

வேலூர் மாவட்டம் பள்ளி ஆசிரியர கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் அறிவிப்பு – நடுத்தர மக்கள் ஊதியம் பெறுவோர் சேமிக்கும் பழக்கத்திற்கு எதிராக உள்ளது ஆசிரியர் அரசு ஊதியம் பெறுவோர் ஏமாற்றம் தனிநபர் வருமான வரி வரம்பு 10இலட்சமாக உயர்த்த
இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு!

பாராளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024-25ஆம் ஆண்டிற்கான  மத்திய  நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி வரம்பு பழைய வரி முறையில் எந்த மாற்றமும் இல்லை தற்போதைய நிலையே தொடரும் என்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் அறிவிப்பு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.  
   
இது குறித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாது.
 பாராளுமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டுள்ள 2024-25ஆம் ஆண்டிற்கான  மத்திய  நிதிநிலை அறிக்கையில் பழைய வரிவிதிப்பு முறையில் தனிநபர் வருமான வரி வரம்பு  எந்த மாற்றமும் இல்லை தற்போதைய நிலையே தொடரும் புதிய வரி விதிப்பை ஊக்குவிக்கும் வகையில் சில அறிவிப்புகள்  என்ற மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு.நிர்மலா சீதாராமன் அவர்களின் இந்த அறிவிப்பு மாத ஊதியம் பெறும் அனைவருக்கும் மிக பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.  
5லட்சத்திலிருந்து 10லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரினோம் ஆனால் 8 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த வரி வரம்பு கடந்த ஆண்டு 7 இலட்சமாக உயர்த்தப்படும்  என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது மேலும் 80சி பிரிவில் சேமிப்புக்கான கழிவுத்தொகை குறித்து அறிவிக்கப்படவில்லை இந்த ஆண்டிற்கான அறிவிப்பிலும் எந்த மாற்றமும் இல்லை என்ற இந்த அறிவிப்பு மாத ஊதியம் பெறும் அனைவருக்கும் மிக பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
 
 
ஆனால் வருமான வரிக்கான நிலையான கழிவு ரூபாய் 50 ஆயிரத்திலிருந்து ருபாய் 75ஆயிரமாக உயர்த்தப்படுகிறது என்ற அறிவிப்பு உள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் சேமிக்கும் பழக்கம் நடுத்தர வர்கத்தினரிடையே முற்றிலும் போக்கிடும் வகையில் அமைந்துள்ளது.  சேமித்தால் மிக அதிகமாக வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது.  ஓய்வூதியம், ஒப்பந்தப்பணி நியமனம், வருமான வரி உச்சவரம்பை பத்து லட்சமாக உயர்த்துதல், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புதல், காலமுறை ஊதியத் திருத்தம் ஆகிய பிரச்னைகளில் பட்ஜெட்டில் உள்ள அணுகுமுறை முற்றிலும் ஊழியர்களின் நலனுக்கு எதிரானது. 

கோரிக்கைகள்
 
தனிநபர் வருமான வரி வரம்பு 7 இலட்சத்திலிருந்து 10 இலட்சமாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்
வீட்டு வாடகைப்படி, மருத்துவ படி, அகவிலைப்படி, மருத்துவ செலவினம் மீள பெறுதல் ஆகியவை மேற்கொள்ளும் செலவினங்களுக்காக தரப்படும் படி ஆகையால் இதனை வருமானமாக கருதாமல் செலவினமாக கருத வேண்டுகின்றோம்.
80C பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழிவுத்தொகை ரூபாய் 1.5 இலட்சத்திலிருந்து ரூபாய் 3 இலட்சமாக உயர்த்த வேண்டும்.
இந்திய மொத்த வருவாயில்(GDP)  6 சதவிகிதமும் மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் 10 சதவிகிதமும் பள்ளிக்கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்திட கோருகின்றோம்.
புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைபடுத்திட வேண்டுகின்றோம்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 
  
            

No comments:

Post a Comment

Post Top Ad