குடியாத்தம் ஜூலை 23
வேலூர் மாவட்டம் குடியாத்தம் , சந்தைப்பேட்டை , சமுதாயக்கூடம் அருகில் மது குடி போதையில் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இது குறித்த அப்பகுதி மக்கள் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி போலீஸ்சார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் விசாரணை செய்ததில் குடியாத்தம் கணபதி நகரை சேர்ந்த மோகன் (வயது 55) இவர் எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தது தெரியவந்தது மேலும் மோகனுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து பல ஆண்டுகளாக தனிமையில் வசித்து வந்துள்ளார் .
இவருக்கு கண்மணி எனற மகள் உள்ளார் திருமணமானவர் திருமணம் ஆகாத மணிகண்டன் என்ற மகன் உள்ளார் மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி
No comments:
Post a Comment