குடியாத்தம் ஜூலை 5
வேலூர்மாவட்டம் குடியாத்தம் அடுத்த சிந்தகணவாய் அரசு நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இன்று (05.7.2024) மாலை குடியாத்தம் நகர லயன் சங்கம் குடியாத்தம் வாசவிகிளப் இனைந்து பள்ளியில் பயிலும் 100 மாணவ மாணவிகளுக்கு லயன்ஸ் சங்க சாசன உறுப்பினர் விவி.பாராத்தசாரதி அவரது தந்தையாரின் 13வது ஆண்டு நினைவாக ஏற்பாடு செய்தார் இதில் வகுப்பு வாரியாக புத்தாடைகள் மற்றும் பேனாக்களை வழங்கினார்.
அதே போல் அந்த பள்ளியில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர் தூய்மை பணியாளர் சமையலர் ஆகியோருக்கு சேலை உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் .இதில் குடியாத்தம் வாசவி கிளப் நிர்வாகிகள் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சிக்கு பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment