குடியாத்தம் ஜூலை 5
வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்தலை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ மணிவண்ணன் அவர்களின் உத்தரவின் படி மாவட்ட முழுவதும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் வாகன தணிக்கை நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்று 5-7-2024 துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதல் படி நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி அவர்கள் தலைமையிலான போலீசார் கொண்ட சமுத்திரம் சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அண்ணாமலை (வயது 21) த/பெ வெங்கடேசன்
சரண்குமார் (வயது 21)த / பெ ஆனந்தன் குடியாத்தம் என்பவர் சட்டவிரோதமாக விற்பனைக்காக கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்திவரப்பட்ட 81 மது பாட்டில்களையும் கடத்தி வருவதற்கு காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment