காட்பாடி வட்ட ரெட்கிராஸ்கிளை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேவகன் அறக்கட்டணை இணைந்து இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 27 July 2024

காட்பாடி வட்ட ரெட்கிராஸ்கிளை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சேவகன் அறக்கட்டணை இணைந்து இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி

காட்பாடி ஜுலை 27


வேலூர் மாவட்டம் காட்பாடி இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளை, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காட்பாடி வட்டார கிளை, இணைந்து இன்று 27.07.2019 காலை 12 மணியளவில் காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாராயணா திருமண மண்டப வளாகத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் மேதகு அ.பெ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக்கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் சேவகன் அறக்கட்டளை இயக்குநர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார் 
செயலாளர் கல்வி உலகம் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு அப்துல் கலாம் நினைவுகளை பற்றி பேசினார்.  

அவைதுணைத்தலைவர் இரா.சீனிவாசன், பொருளாளர் வி.பழனி, மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், விளையாட்டு வீரர் எம்.கே.சூர்யா, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் காட்பாடி கிளை  பொருளாளர் எம்.ஈஸ்வரி சாலை பாதுகாப்பு படை மாணவர் தலைவி மீனா உள்ளிட்டோர் பேசினர். 9ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு கலாம் அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்னன் பேசும் போது கூறியதாவது.. இந்தியாவின்  தலைசிறந்த  விஞ்ஞானி,  தொழில்நுட்ப  வல்லுநர்,  மிகப்பெரிய  பொருளாளர்,  இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவர், இந்திய ஏவுகணை நாயகன்,  இந்திய  விஞ்ஞான  வளர்சியின் தந்தை,  சிறந்த  ஆசிரியர்  மற்றும்  அனைவராலும்  மதிக்கத் தக்க  அற்புதமான  பேச்சாளர்,  வருங்கால இளைஞர்களின் முன்மாதிரி..   இந்தியாவை  அணு ஆயுத  வல்லரசாக  மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம்,  இதுவரை  ஐந்து  ஏவுகணை  திட்டங்களில்  பணிபுரிந்துள்ளார்.  

அக்டோபர் 15, 1931ல் பிறந்த டாக்டர்  ஏபிஜே  அப்துல்  கலாம், தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித  ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். ஜூலை 27, 2015-ல்  இந்தியாவின்  மேகாலயா  மாநிலத்தலைநகரான  ஷில்லாங்கில்  இந்திய  மேலாண்மை  கல்வி  நிறுவனத்தில்  மாணவர்களிடையே  உரையாற்றுகையில்  மாலை  சுமார் 6.30 மணியளவில்  மயங்கி  விழுந்தார்.  தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார். 
அன்னாரின் கனவுகளை நாம் நினைவாக்குவோம் என்றார்.
இந்தியன் ரெட்கிராஸ் மேலாண்மைக்குழு தமிழ்நாடு அறிவியல் இயக்க, சேவகன் அறக்கட்டளை, தீபம் தோழி மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்ளிட்டோர்  கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
 
 
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad