வேலூர், ஜூலை 12-
வேலூர் மாவட்டம், சலவன் பேட்டை பகுதியைச் சேர்ந்த குட்டி மணி என்பவர் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.51.208 மற்றும் கே. வி. குப்பம் பகுதியைச் சேர்ந்த முகேஷ் குமார் என்பவரது வங்கி கணக்கிலிருந்து ரூ. 2,72 600 ஆகியவற்றை ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்துள்ளனர்.
இது குறித்து இருவரும் வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி ரூபாய் 1.15 லட்சத்தை மீட்டு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் வங்கியில் இருந்து பணத்தை இழந்த குட்டிமணி மற்றும் முகேஷ் குமார் ஆகிய இருவரையும் நேரில் அழைத்து அவர்கள் இருவரிடமும் அவர்கள் இழந்த பணத்தை மீண்டும் ஒப்படைத்தார். அவர்கள் இருவரும் பணத்தைப் பெற்றுக் கொண்டு காவல்துறைக்கு தங்களது நன்றியை தெரிவித்து விட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment