குடியாத்தம் ஜூலை 11
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கிராமிய காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான போலீசார் தமிழக ஆந்திர எல்லையான சைனுகுண்டா பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதிவேகமாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
காரின் பின் பக்க சீட்டின் கீழ் பகுதியில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கொல்லப்பள்ளியை சேர்ந்த குடியரசு 25 சேங்குன்றம் பகுதியை சேர்ந்த கோகுல் குமார் (வயது 26) மாதேஷ் (வயது 21) பெரம்பலூர் அடுத்த பிளாங்குப்பம் வெங்கடேசன் (வயது 23) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பெங்களூரில் வாடகைக்கு எடுத்து இது போன்ற கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதும் தெரிய வந்தது. இதை அடுத்து தலா மூன்று பண்டல்களில் இருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸ் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து குடியரசு கோகுல் குமார் மாதேஷ் வெங்கடேசன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இதில் குடியரசு கோகுல் குமார் ஆகிய இருவர் மீது கொலை கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment