வேலூர் ஜுலை 11
வேலூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வேலூர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக இருந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர்.
அப்போது அந்த நபரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 1.7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment