காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு மகிழ் அறக்கட்டளையின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 16 July 2024

காமராஜர் அவர்களின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு மகிழ் அறக்கட்டளையின் சார்பில் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல்

குடியாத்தம் ஜூலை 16

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மகிழ் அறக்கட்டளையின் சார்பாக முதற்கட்டமாக குடியாத்தம் சாமியார் மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 140 மாணவ மாணவிகளுக்கும்  கொட்டமிட்டா அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 360 மாணவ மாணவிகளுக்கும் 
குடியாத்தம் காந்தி நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 100 மாணவ மாணவிகளுக்கும்
கிராமப்புற அரசு பள்ளியை தேர்ந்தெடுத்து இதுவரை 600 மாணவர்களுக்கு நோட்புக் பேனா பென்சில் மற்றும்  அழிப்பான் வழங்கியுள்ளோம்.

இந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக குடியாத்தம் உட் கோட்ட நிர்வாக நீதிபதி மற்றும் வருவாய் கோட்டாட்சியருமான சு சுபலட்சுமி பி இ அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் பேனா பென்சில்களை வழங்கினார்.

உடன் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள்
இந்நிகழ்ச்சி அமைய உறுதுணையாக இருந்த மகிழ் அறக்கட்டையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
டீ பொன்னரசு கே மோகன் பி பார்த்திபன் பி விக்னேஷ் ஆர் எஸ் மணிகண்டன் கே மோகன் எஸ் என் சரவணன் கே குருமூர்த்தி எம் ஜெயக்குமார் எம் கோபி கே முருகன் பி சதீஷ்குமார் வி திருநாவுக்கரசு யுவன் சங்கர் எம் புகழரசன் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad