போதை பொருள் லஞ்சம் அதிகரித்து வரும் திமுக அரசு கண்டித்து பா ஜ .க சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 16 July 2024

போதை பொருள் லஞ்சம் அதிகரித்து வரும் திமுக அரசு கண்டித்து பா ஜ .க சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் ஜூலை 16

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை பா ஜா க சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு நகரத் தலைவர் சாய் ஆனந்தன் தலைமை தாங்கினார்
மாவட்டத் தலைவர் மனோகரன் அவர்கள் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

குடியாத்தம் நகரில் தடை செய்யப்பட்ட
3 நம்பா் லாட்டரி தாராளமாக, புரளக்கூடிய கஞ்சா பான் மசாலா குட்கா விற்பனையை கண்டுகொள்ளாமல்
காமராஜர் பாலம் அருகிலுள்ள டாஸ்மார்க் கடைகள் உள்ளதால் 
காமராஜர் பாலம் டாஸ்மார்க்  பாராக
 மாறி வருகிறது ஆகையால் உடனடியாக அகற்ற வேண்டும்.

குடியாத்தம் நகராட்சியில் 
புதிய வீடுகள் கடைகள் கட்டுவதற்கு அனுமதி  வாங்குவதில் 
லஞ்சம் பெருகி வருகிறது.
திறனற்ற விடியா திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் லோகேஷ் நகர  பொதுச்செயலாளர் குமரவேல் பொருளாளர் அரிகிருஷ்ணன்  நல திட்ட பிரிவு 
சந்திர மௌலி உள்பட 300-க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad