கே வி குப்பம் ஜூலை 15
வேலூர் மாவட்டம் கே வி குப்பம்
ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியம் கம்பத்தம் அரசு உதவி பெறும் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடக்க விழாவில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் D.M.கதிர் ஆனந்த்MP அவர்கள் கலந்துக்கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
உடன் ஒன்றியக்குழு பெருந்தலைவர் லோ.ரவிசந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் சீதாராமன், முருகேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் தயாளமூர்த்தி, ஊரக உள்ளாட்சிமன்ற உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஆசிரியர்கள், கழக தோழர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment