வேலூர் சிப்பாய்ப் புரட்சி 218வது தின விழா பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உதவி ஆட்சியர் ஆர்.கே.கவிதா பரிசளித்து பாராட்டு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 11 July 2024

வேலூர் சிப்பாய்ப் புரட்சி 218வது தின விழா பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உதவி ஆட்சியர் ஆர்.கே.கவிதா பரிசளித்து பாராட்டு

வேலூர் ஜுலை 11

வேலூர் மாவட்டம் சிப்பாய் புரட்சி 218 வது  தின விழா பல்வேறு போட்டிகள் நடைபெற்றது வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு உதவி ஆட்சியர் ஆர்கே கவிதா பரிசளித்து பாராட்டினர்.
 
இந்திய விடுதலை போருக்கு வித்திட்ட 1806 ஜுலை 10 ஆம் நாள் வேலூர் சிப்பாய் புரட்சி வேலூர் கோட்டையில் நடைபெற்றது.
அதன் 218ஆம் ஆண்டு நினைவாக மகத்தான புரட்சியின் வீர வரலாற்றை மக்களிடையே குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே எடுத்துச் சொல்லும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி ஊரிசு கல்லூரி வரலாற்று துறையுடன் தமிழ்நாடு முற்போக்கு ஏழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், வேலூர் வாசிப்பு இயக்கம் இணைந்து வேலூர் ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை பேச்சு கவிதை மற்றும் ஓவிய போட்டிகளை நடத்தி அதில் தேர்வான மாணவர்களுக்கு பாராட்டு சான்றுகளை உதவி ஆட்சியர் ஆர்.கே.கவிதா அவர்கள் வழங்கினார்.

இந்த நிகழ்விற்கு ஊரிசு கல்லூரி முதல்வர்(பொ) ஜெ.ஆனிகமலாப்ளாரன்ஸ் தலைமையிலும் வேலூர் வாசிப்பு இயக்க தலைவர் ஓய்வுபெற்ற மாவட்ட கருவூல அலுவலர் முத்து.சிலுப்பன், எழுத்தாளர் சங்க மாவட்ட தலைவர் சகுவரதன் ஆகியோர் இணைத்தலைமையிலும் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் சி.குணசேகரன், இராணிப்பேட்டை மாவட்ட துணைத்தலைவர் கா.பூபாலன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ச.ஆறுமுகம், இராணிப்பேட்டை மாவட்ட தலைவர் எஸ்.பாலசுப்பிரமணி, செயலாளர் எல்.ரஜினிகாந்த், துணைச்செயலாளர் கவிப்பித்தன், தலைமையாசிரியை மா.சினேகலதா, துணைத்தலைவர் த.ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைவர் பேராசியர் முனைவர் எம்.பால்தினகரன் வரவேற்று பேசினார்.  மேனாள் மாவட்ட தலைவர் முல்லைவாசன், வேலூர் சிப்பாய்ப் புரட்சி விழா துவக்கவுரையாற்றினார்.
கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போடிகள் குறித்து அறிவியல் இயக்க வேலூர் மாவட்ட தலைவர் பேராசிரியை முனைவர் பெ.அமுதா தொகுப்புரையாற்றினார்.
இந்திய விடுதலைக்கு வித்திட்ட வேலூர் புரட்சி என்ற தலைப்பில் மாநில பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசினார்.
மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வேலூர் உதவி ஆட்சியர் ஆர்.கே.கவிதா சிறப்புரையாற்றினார்.
வேலூர் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முனைவர் அ.மலர், ஊரிசு கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ஒய்.டேவிட்நரேஷ்பென்ஞமின், டிகேஎம் கல்லூரி முதல்வர் ஆர்.பானுமதி, மாநில செயற்குழு உறுப்பினர் இரா.தெ.முத்து ஆகியோர் பாராட்டுச் சான்றுகளை வழங்கி பேசினர்.
மாவட்ட செயலாளர் எஸ்.சுரேந்திரன் நன்றி கூறினார்.
வேலூர் கிளை செயலாளர் வராரா, பொருளாளர் கி.உமாநாத், ரமேஷ், சீ.அகசன், இராம.சுடர்கெசாடி, பா.ராஜேந்4திரன், எஸ்.ஶ்ரீராம், பா.சேகர், மு.பிரபு, ஆர்.மணிகண்டன், மு.க.ஜீவா, க.சரவணராஜ், கோ.மோகனமூர்த்தி, ஜெயசீலன், பூசாமி ஆகியோர் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளையும் விழாவினையும் ஒருங்கிணைத்தனர்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad