குடியாத்தம் ஜுலை 11
வேலூர் மாவட்டம் குடியாத்தம்
வி.சி.க, பி.எஸ்.பி, லோக் ஜனசக்தி, காங்கிரஸ் எஸ்,சி.எஸ்,டி அணி, புதிய நீதி கட்சி. எஸ்.சி.எஸ்.டி அணி, டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் விழிப்புணர்வு அமைப்பினர்கள் சார்பில் மறைந்த பி எஸ் பி ஆம்ஸ்ராங்கின் நினைவு போற்றி நினைவஞ்சலி நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே, குடியாத்தம் விடுதலை சிறுத்தை கட்சி மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழ் மாநில தலைவர் கே ஆர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் நினைவை போற்றி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து அவரது நற்பணிகளை போற்றி பேருரையாற்றி நினைவு அஞ்சலி நிகழ்வை விடுதலை சிறுத்தைகள் கட்சி குடியாத்தம் நகர செயலாளர் கு.குமரேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சி வேலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் சிவ செல்லபாண்டியன், இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி.தலித்குமார், புதிய நீதி கட்சி, குடியாத்தம் மேற்கு ஒன்றிய செயலாளர் தென்காந்தி, நாகராஜ், ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேருரையாற்றி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி குடியாத்தம் ஒன்றிய செயலாளர் விடுதலை செழியன், குடியாத்தம் நகர ஒருங்கிணைப்பாளர், ஜெய்கணேஷ், மாவட்ட ஐடி சரண் குமார் சே, தொண்டர்அணி அமைப்பாளர் ராஜேஷ், பாஜக பட்டியல அணி வேலூர் மாவட்ட பொதுச் செயலாளர் மதன், பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் குடியாத்தம் வி.சி.க, பி.எஸ்.பி, லோக் ஜனசக்தி, காங்கிரஸ் எஸ்,சி.எஸ்,டி அணி, புதிய நீதி கட்சி. எஸ்.சி.எஸ்.டி அணி, டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர் விழிப்புணர்வு அமைப்பினர்கள், இந்திய குடியரசு கட்சி என பல்வேறு கட்சியினர்கள் இணைந்து இந்த நினைவு அஞ்சலி செலுத்தி அவரது நினைவை போற்றி பேருரையாற்றினர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment