அரசு வேலை வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் 22 லட்சம் மோசடி முன்னாள் ரயில்வே காவலர் கைது! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 17 July 2024

அரசு வேலை வாங்கித் தருவதாக பொதுமக்களிடம் 22 லட்சம் மோசடி முன்னாள் ரயில்வே காவலர் கைது!

காட்பாடி ஜூலை 17 

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வேலை வாங்கித் தருவதாக பள்ளிகொண்டா அன்பழகன் இளவரசனிடம் 22 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு மூன்றரை ஆண்டுகளாக ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட முன்னாள் ரயில்வே காவல் ஊழியர் சந்திரன் கைது செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பாரதி நகரைச் சார்ந்த சந்திரன் (வயது 70 )ரயில்வே பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவராவர். இவர் அரசு வேலை வாங்கி தருவதாக, அணைக்கட்டு தாலுகா, பள்ளிகொண்டாவைச் சார்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் அன்பழகன் மகன் இளவரசன் (வயது 35) இவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி அன்பழகன் மகன் இளவரசனிடம் ரூ.22 லட்சம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தராமல் இழுக்கடித்துள்ளார். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக அரசு வேலை வாங்கி தராமலும், ஆசை வார்த்தைகளை கூறி மோசடி நோக்கத்தில்  பெற்றுக்கொண்ட ரூ.22 லட்சம் பணத்தையும் திருப்பி தராமலும் அன்பழகன் மற்றும் இளவரசனை அலையவிட்டுள்ளனர். 

இதுகுறித்து காவல்துறையில் புகார் தெரிவித்தும் பல்வேறு கட்டப்பஞ்சாயத்துகள் செய்து சமரசம் செய்து வாபஸ் வாங்க வற்புறுத்தி காலம் கடத்தி வந்த நிலையில் இந்த ஆதாரங்களின் அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ரூ. 22 லட்சம் வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் மோசடியில் ஈடுபட்ட சந்திரனிடம் பெற்றுக்கொண்ட 22 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுக்கவும் இவர் மீது மோசடி வழக்கில் கைது செய்ய வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்து காவல்துறைக்கு அழுத்தம் தந்த பாதிக்கப்பட்ட நபர்கள், அன்பழகன் மற்றும் இளவரசன் ஆகியோரின் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து சந்திரன் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்று தொடர்ச்சியாக தப்பித்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இதனைத் தொடர்ந்து சந்திரன் என்பவரின் முன் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அன்பழகன் மற்றும் இளவரசன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தனர். அன்பழகனின் மேல்முறையீட்டு வழக்கின் அடிப்படையில் சந்திரன் என்பவரை விசாரணைக்கு ஆஜராகி கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டதன் பேரில் வேலூர் குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சாரதி மற்றும் குற்றப்பிரிவு ஆய்வாளர் காந்திமதி தலைமையிலான குழுவினர் சந்திரன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சந்திரனை கைது செய்தனர். மேலும் இந்த மோசடிகளில் பல்வேறு தரப்புகளில் யாரேனும் இவருடன் உடந்தையாக செயல்பட்டு உள்ளார்களா இவரிடம் வேறு யாரேனும் ஏமார்ந்துள்ளாரா என காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad