குடியாத்தம் ஜூலை18
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவரும், கண், உடல் உறுப்பு தானம் சமுக ஆர்வலருமான எம்.கோபிநாத்துக்கு முன்மாதிரி சேவையாளர் விருதை சென்னை ஐ.டி. சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.
சென்னை ஐ.டி. சிட்டி ரோட்டரி சங்கத்தின் 13-வது தலைவராக டாக்டர் விஜயா ரமேஷ் பதவியேற்பு விழா சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அலுமினி அரங்கில் நடைபெற்றது.
விழாவில் சங்கச் செயலாளராக எஸ்.ராமானுஜம் மற்றும் நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்துதமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், ரோட்டரி மாவட்ட ஆளுநர் எஸ்.மகாவீர் போத்ரா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் கோல்டன் கேலக்ஸி ரோட்டரி சங்கத்தின் சாசனத் தலைவரும், கண், உடல்தான ஆர்வலருமான எம்.கோபிநாத்துக்கு முன்மாதிரி சேவையாளர் விருதை சுதா சேஷய்யன் வழங்கினார். அப்போது சுதா சேஷய்யன் பேசியதாவது
ரோட்டரி சங்க நிர்வாகி எம்.கோபிநாத் மருத்துவத் துறைக்கு ஆற்றியுள்ள சேவை அளப்பரியது. அவரது முயற்சியால், உயிரிழந்த 800 பேரின் கண்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்குத் தானமாகப் பெறப்பட்டுள்ளன. இதனால் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பார்வை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இறந்த 287 பேரின் உடல்களைத் தானமாகப் பெற்று, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அளித்து மருத்துவ மாணவர்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட வழிவகை செய்துள்ளார்.
ஆதரவற்று இறந்த முந்நூறுக்கும் மேற்பட்டோரின் உடல்களை தனது சொந்த செலவில் அடக்கம் செய்துள்ளார்.
இவ்வாறு மருத்துவத் துறையில் கோபிநாத்தின் தன்னலமற்ற சேவை போற்றுதலுக்கு உரியது.
இவ்வாறு சுதா சேஷய்யன் பேசினார்.
விழாவில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் எம்.ஹரிபிரசாத், கே.ஆர்.மோகனகிருஷ்ணன், பத்மாவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment