குடியாத்தம் ஜூலை 24
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுக்கா அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் சித்ராதேவி தலைமை தாங்கினார்
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நரசிம்மன் முன்னிலை வகித்தார்
இந்நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறை உதவி இயக்குனர் உமா சங்கர்
வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் உதயகுமார்
மண்டல துணை வட்டாட்சியர் சுபி சந்தர் தோட்டக்கலை அலுவலர் தமிழரசி தலைமை நில அளவர் சுரேஷ்பாபு சுகாதாரத் துறை அலுவலர் பிரகாசம் மற்றும் பிற துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கீழ்கண்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மோர் தானா அணையை சுற்றுலா தளமாக அமைக்க வேண்டும்
குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டும்
மருத்துவமனையில் இரவு நேரங்களில் சண்டைகள் ஏற்படுகிறது இதனால் பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. இம்மருதமனையில் புறநகர் காவல் நிலையம் மற்றும் காவலர் நியமனம் செய்ய வேண்டும்.
லட்சுமணபுரம் முதல் தட்டப்பாறை வெள்ளேரி வரை சாலை குண்டும் குழியுமாக உள்ளது இவைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்
குடியாத்தம் மாட்டு சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
குடியாத்தம் மாட்டு சந்தையில் உள்ள சமுதாயக்கூடம் மூங்கப்பட்டு காந்திநகர் பகுதியில் உள்ள மூன்று சமுதாய கூடங்களையும் புனரமைப்பு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
100 நாட்கள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் பணி வழங்க வேண்டும்
ஏரி குளங்களை துாா் எடுக்க வேண்டும்
தட்டப்பாறை ஊராட்சி வெள்ளேரி பகுதியில் மொரம்புகள் கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்
வெள்ளேரி முதல் ஜிட்டபல்லி வரை நடமாடும் சாராய விற்பனையை தடுக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்
இதில் சாமிநாதன் சம்பத் நாயுடு துரை செல்வம் சேகர் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment